இலங்கை தொடர்பான பயண எச்சரிக்கையை தென்கொரியா தளர்த்தியுள்ளது.
அதன்படி, இலங்கைக்கான பயண எச்சரிக்கையை இன்று (ஜூலை 01) முதல் நிலை 2 இல் இருந்து 1 ற்கு திருத்தம் செய்ய தென் கொரியாவின் வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் தென்கொரிய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையின் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலைமைகள் காரணமாக பயண வழிகாட்டுதல்கள் தளர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கொரிய சுற்றுலாப் பயணிகள்
எனவே கொரிய சுற்றுலாப் பயணிகளை இலங்கை ஈர்க்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை தென்கொரியா பல இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.