இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய இரா சம்பந்தன் (R. Sampanthan) உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு (colombo) தனியார் வைத்தியசாலையில் காலமாகியுள்ளார்.
இரா. சம்பந்தனின் மறைவிற்கு இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா (Sarath Fonseka ) தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
குறித்த இரங்கல் செய்தியினை அவர் தனது எக்ஸ் (x) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இழப்பு பெரிதும் உணரப்படும்
குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, “எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I express my deepest condolences. Hon. R. Sampanthan was a very senior politician. His loss would be greatly felt. @TNAmediaoffice https://t.co/7Xka8GmyKQ
— Sarath Fonseka (@SF2024_SL) June 30, 2024
ஆர்.சம்பந்தன் மிகவும் மூத்த அரசியல்வாதி. அவரது இழப்பு பெரிதும் உணரப்படும் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச இரங்கல்
இதேவேளை, இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தனின் (R. Sampanthan) மறைவிற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இரங்கல் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஒரு பழைய நண்பர் மற்றும் சக ஊழியர், நாங்கள் பல நாட்கள் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்தோம்.
அவரது மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த சோக இழப்பை போக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.