Home ஏனையவை ஆன்மீகம் மட்டக்களப்பில் ஆரம்பமான கதிர்காம புனித பாதயாத்திரை

மட்டக்களப்பில் ஆரம்பமான கதிர்காம புனித பாதயாத்திரை

0

நிலையான சமாதானத்திற்கான நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவோம் என்னும்
தொனிப்பொருளிளலான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கதிர்காம பாதயாத்திரை
மட்டக்களப்பில்(Batticaloa) ஆரம்பமாகியுள்ளது.

மட்டக்களப்பு கூழாவடியில் உள்ள விக்னேஸ்வரா திருத்தொண்டர்
மண்டபத்தில் நேற்று(01)காலை இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

சிறப்பு பூஜைகள்

நிலையான சமாதானத்திற்கான நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவோம்
என்னும் தொனிப்பொருளில் வருடாந்தம் இந்த நல்லிணக்க பாதயாத்திரை
முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதன்போது பௌத்த, இந்து, இஸ்லாமிய மதகுருமார்கள்ன மத அனுஷ்டானங்களை தொடர்ந்து
பாதயாத்திரிகர்களுக்கான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில்
சிறப்பு பூஜைகள் நடைபெற்று புனித யாத்திரையானது உகந்தை மலையினை நோக்கி ஆரம்பமானது.

இதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நிசாந்தி அருள்மொழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிர்வாக பணிப்பாளர் சமன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version