அமெரிக்காவிற்கு (United States) இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது வரி விதிப்பது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி வரி விதிப்பு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது இந்த வரி விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி விதிப்பு
எவ்வாறான வரி விதிப்பு மேற்கொள்ளப்படும் என்பது குறித்த சரியான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு அதிகளவில் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் மெக்ஸிக்கோ மற்றும் கனடா ஆகியன முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
