Home உலகம் நிசப்தமான காசா…! ஹமாஸ் வெளியிட்ட இஸ்ரேல் பணய கைதிகளின் பட்டியல்

நிசப்தமான காசா…! ஹமாஸ் வெளியிட்ட இஸ்ரேல் பணய கைதிகளின் பட்டியல்

0

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இரண்டாவது கட்டமாக இன்று விடுவிக்கப்பட உள்ள 4 பெண் பணயக்கைதிகளின் பெயர்ப்பட்டியலை ஹமாஸ் (Hamas) அமைப்பு வெளியிட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இஸ்ரேல் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை இஸ்ரேல் (Israel) இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்காலிக போர் நிறுத்தம்

இஸ்ரேல் – காசாவுக்கிடையிலான போர் 15 மாதங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

தற்காலிக போர் நிறுத்தத்தின் போது 120க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பணயக் கைதிகள் உள்ளனர். அதில் 34 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version