Home உலகம் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லா விடுத்துள்ள எச்சரிக்கை!

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லா விடுத்துள்ள எச்சரிக்கை!

0

இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் (Hamas) அமைப்பின் தலைவா் யாஹ்யா சின்வாரின் (Yahya Sinwar) மரணத்தையடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் நேற்று (17.10.2024) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், ஹமாஸின் தலைவர் சின்வாரின் மரணம் தொடர்பில் பதிலளித்த ஹிஸ்புல்லா அமைப்பு,
“இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம்“ என்றும் ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹமாஸ் தலைவரின் மரணம்

கடந்த வருடம் (2023) அக்டோபர் மாதம் 7ஆம் திகதியன்று இடம்பெற்ற இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பெரும் புள்ளியாக செயல்பட்ட சின்வார், கடந்த புதன் கிழமை(16) பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் போது கொல்லப்பட்டார்.

அத்துடன், அவரது மரணம் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக மேற்கத்திய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் போராளிகளால் கைப்பற்றப்பட்ட பணயக்கைதிகள் திரும்பும் வரை போர் தொடரும் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, ஹமாஸ் தலைவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டபோது, ஆளில்லா விமானம் மூலம், அவர் இருந்த இடத்தில் பதிவு செய்த காணொளியை இஸ்ரேல் இராணுவம் தற்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version