Home உலகம் பாலஸ்தீன இளைஞர்கள் மீது ஹமாஸ் அமைப்பினர் கொலைவெறித் தாக்குதல் (வைரலாகும் காணொளி)

பாலஸ்தீன இளைஞர்கள் மீது ஹமாஸ் அமைப்பினர் கொலைவெறித் தாக்குதல் (வைரலாகும் காணொளி)

0

ஹமாஸ் அமைப்பினர் முகமூடி அணிந்தபடி, பாலஸ்தீனிய இளைஞர்கள் இருவரை கடுமையாக தாக்கும் காணொளி ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது.

அதில்,பொதுமக்கள் பலர் முன்னிலையில் இளைஞர்கள் 2 பேர் கடுமையாக தாக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களை தடுக்க ஒருவரும் முன்வரவில்லை. மக்களும் அமைதியாக அதனை வேடிடிக்கை பார்த்தபடி செல்கின்றனர்.

இளைஞர்களில் ஒருவர், தரையில் புரண்டபடி அவர்களிடம் கெஞ்சியபோதும் கம்புகள், துப்பாக்கிகள் மற்றும் இரும்பு தடிகளை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது.

கொடூர தாக்குதல்

நாற்காலி ஒன்றை கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. மற்றொரு நபர் எழுந்து நிற்க முடியாமல் மெல்ல நடந்து செல்கிறார். கொடூர தாக்குதலை நடத்திய முகமூடி அணிந்த நபர்கள், வாகனத்தில் ஏறி செல்வதுடன் காணொளி நிறைவடைகிறது.

ஹம்சா அல் மஸ்ரி என அராபி எழுத்துகளால் எழுதப்பட்ட அந்த காணொளி எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்ற விவரம் வெளிவரவில்லை. எனினும், மக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதியாக அது இருக்க கூடும் என கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version