Home உலகம் ஹமாஸ் அறிவிப்பால் நிசப்தமாகிய இஸ்ரேல் போர்: இன்றுடன் தணியும் மத்தியகிழக்கு மோதல்

ஹமாஸ் அறிவிப்பால் நிசப்தமாகிய இஸ்ரேல் போர்: இன்றுடன் தணியும் மத்தியகிழக்கு மோதல்

0

காசாவில் (Gaza) போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைபடுத்தப்பட்ட முதல் நாளில் விடுவிக்கப்படவுள்ள மூன்று இஸ்ரேலிய கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.

இந்த பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ரோமி கோனென் (24), எமிலி டமாரி (28), மற்றும் டோரன் ஷ்தான்பர் கைர் (31) ஆகிய பணயக்கைதிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி ஒப்புதல்

இஸ்ரேல் அரசாங்கம் இறுதி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பு உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முதல் 6 வாரங்களுக்கு நடைமுறைக்கு வரவுள்ளது.

அதன்போது, பெண்கள், குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த கைதிகள் உட்பட மீதமுள்ள 98 இஸ்ரேலிய பணயக்கைதிகளில் 33 பேர் முதல் கட்டத்தில் விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

இந்த நிலைியில், பெரும்பாலானவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் எதிர்பார்த்துள்ள நிலையில், ஹமாஸிடமிருந்து எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை.

2,000 பாலஸ்தீனியர்கள் விடுதலை

எனினும், விடுவிக்கப்படும் பணயக்கைதிகளுக்கு பதிலாக இஸ்ரேல் கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீனியர்களை அதன் சிறைகளில் இருந்து விடுவிக்க உள்ளது.

அவர்களில் 737 ஆண்கள், பெண்கள் மற்றும் நடுத்தர வயது கைதிகளும் அடங்குவர், அவர்களில் சிலர் டஜன் கணக்கான இஸ்ரேலியர்களைக் கொன்ற தாக்குதல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட போராளிக் குழுக்களின் உறுப்பினர்கள் என கூறப்படுகிறது.

அத்தோடு, போர் தொடங்கியதிலிருந்து காசாவில் தடுத்து வைக்கப்பட்டு இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,167 பாலஸ்தீனியர்களும் அந்த பட்டியலில் அடங்குவர்.

போர் நிறுத்த முதல் கட்டம்

இவ்வாறனதொரு பின்னணியில், சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேலின் நீதி அமைச்சு போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் அவர்களின் விவரங்களை வெளியிட்டது, ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொரு பெண் பிணைக் கைதிக்கும் 30 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவித்தது.

மேலும், போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, ​​இஸ்ரேலிய இராணுவம் காசாவில் உள்ள அதன் சில நிலைகளில் இருந்து பின்வாங்குவதோடு, வடக்கு காசாவில் உள்ள பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள்.

அமைச்சர்கள் பதவி விலகல்

அதனை தொடர்ந்து, போர் நிறுத்தம் தொடங்கிய 16 நாட்களுக்குப் பிறகு தொடங்கும் பேச்சுவார்த்தைகளின் முடிவுகளைப் பொறுத்து, இரண்டாவது கட்டமாக, மீதமுள்ள பணயக்கைதிகளை பரிமாறிக்கொள்வதும், காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்களை திரும்பப் பெறுவதும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிர்பு தெரிவித்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவையில் இருந்து பென்-க்விரின் தேசியவாத-மதக் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version