Home உலகம் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரானின் உச்ச தலைவர்

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரானின் உச்ச தலைவர்

0

ஹமாஸ் (Hamas) அமைப்பின் இலக்கானது ஈரானின் (Iran) ஆதரவுடனும், புதிய தலைமையுடனும் பல மடங்காக தொடரும் என அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ali Khamenei) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதற்கு அலி கமேனி தனது எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள இரங்கல் பதிவிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்வாரின் மரணம்

குறித்த பதிவில் “சின்வாரின் மரணம் இஸ்ரேலின் எதிர்ப்பு குழுக்களுக்கும், ஹமாஸ் உட்பட ஈரான் ஆதரவு பிராந்திய பிரதிநிதிகளின் வலையமைப்புக்கும் பாரிய இழப்பாகும்.

இழப்பு மிகப்பெரியது என்றாலும் எமது நடவடிக்கைகள் தொடரும்.

பல ஆண்டுகளாக முந்தைய ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் பலிவாங்கியிருந்தாலும், தமது முன்னேற்றத்தை அந்த அமைப்பு ஒருபோதும் நிறுத்தவில்லை.

இஸ்ரேல் – ஹமாஸ்

அதேபோல், தற்போதைய சின்வாரின் மரணம் தியாகமே தவிர, ஹமாஸிற்கான பின்னடைவல்ல. இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததற்காக சின்வாரைப் பாராட்டுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் கொள்ளப்பட்டார்.அவரது மரணத்தை ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version