Home உலகம் இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு காசாவில் காத்திருந்த அதிர்ச்சி

இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு காசாவில் காத்திருந்த அதிர்ச்சி

0

காசாவின் கான் யூனிஸில் உள்ள ஒரு முக்கிய மருத்துவமனையின் கீழ் ஹமாஸ் சுரங்கப்பாதை வலையமைப்பைக் கண்டுபிடித்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை(IDF) கூறியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி, ஐரோப்பிய மருத்துவமனை வளாகத்திற்கு அடியில் உள்ள இந்த சுரங்கப்பாதை, மூத்த ஹமாஸ் செயல்பாட்டாளர்களுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாகவும், இஸ்ரேலியப் படைகள் மீதான தாக்குதல்களை ஒருங்கிணைக்கவும் செயல்பட்டுள்ளது.

இது தொடர்பில் IDF எகஸ் தளத்தில் காட்சிகளை வெளியிட்டது, அதில் ஆயுதங்கள், உளவுத்துறை பொருட்கள் மற்றும் செயல்பாட்டு உபகரணங்களை வைத்திருக்கும் பல அறைகளைக் கொண்ட ஒரு நிலத்தடி உள்கட்டமைப்பை காணக் கூடியதாக உள்ளது.

இஸ்ரேலின் குற்றச்சாட்டு 

இந்த காணொளி IDF இன் 36வது பிரிவால், புலனாய்வு இயக்குநரகத்தால் வழிநடத்தப்பட்டு, கோலானி படைப்பிரிவு, யஹலோம் பிரிவு மற்றும் சிறப்புப் படைகளின் துருப்புக்களை உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையின் போது பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, ஹமாஸ் பயங்கரவாத நோக்கங்களுக்காக காசாவில் உள்ள மருத்துவமனைகளை தொடர்ந்து சுரண்டி வருவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version