கனடாவின் பிரதான நகரம் ஒன்றான ரொறன்ரோவில்(toronto) சராசரி வீட்டு வாடகைத் தொகை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக கனேடிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த மார்ச் மாதத்தை விடவும் இம்மாதம் (ஏப்ரல்) 0.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஈரான் உடனான தொடர்பு: அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை
சராசரி வாடகைத் தொகை
அத்தோடு, கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே ரொறன்ரோவில் சராசரி வீட்டு வாடகைத் தொகை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இம்மாதத்தில் சராசரி வாடகைத் தொகையானது, 2782 டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதிகமான வாடகைத் தொகை
அதேவேளை, ரொறன்ரோவானது, கனேடிய நகரங்களில் மிகவும் அதிகமான வாடகைத் தொகை அறவிடும் நகரமாக இருந்து வருகிறது.
அதன் அடிப்படையில், குறித்த நகரத்தில் ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை 2489 டொலர்களுக்கும் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை 3270 டொலர்களாகவும் மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்று 3728 டொலர்களுக்கு வாடகைக்கு வழங்கப்படுகிறது.
கனடாவில் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னம்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |