Home உலகம் உடலில் பச்சை குத்திக்கொள்பவரா நீங்கள்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

உடலில் பச்சை குத்திக்கொள்பவரா நீங்கள்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

0

 உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை சுவீடன் (Sweden) நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், உடலில் பச்சை குத்திக்கொள்வதால், லிம்போமா (Lymphoma) என்ற இரத்தப் புற்றுநோய் உருவாகும் அபாயம் 21 சதவீதம் வரை இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புற்றுநோய் செல்கள்

இந்நிலையில், லிம்போமா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2,938 பேர் உட்பட மொத்தம் 11,905 பேர் ஆய்வு செய்யப்பட்டனர்

அதன்படி, பச்சை குத்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, பச்சை குத்தியவர்களுக்கு ​​​​புற்றுநோய் செல்கள் வேகமாக வளரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், இது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version