Home உலகம் நேபாள காலநிலை பேரழிவு: 200 பேர் பலி – பலர் மாயம்

நேபாள காலநிலை பேரழிவு: 200 பேர் பலி – பலர் மாயம்

0

நேபாளத்தில் (Nepal) கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேபாளத்தில் கடந்த சில நாட்களாகவரலாறு காணாத வகையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

பாடசாலைகளுக்கு  விடுமுறை

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதுடன், பாடசாலைகளுக்கும் 03நாட்கள் விடுமுறை வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக நேபாள காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நேபாளத்தில் 300இற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 16 பாலங்கள் சேதமடைந்துள்ளதுடன் மீட்பு பணிகளுக்காக 20 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தற்போது வரை 3,626 பேர் மீட்கப்பட்டு உள்ளாகவும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/P4Bx1ZF1ZbQ

NO COMMENTS

Exit mobile version