Home உலகம் நடுவானில் வெடித்து சிதறிய விமானம்! இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி

நடுவானில் வெடித்து சிதறிய விமானம்! இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி

0

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நடுவானில் விமானம் வெடித்து சிதறியதில் இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கென்யாவின் வடமேற்கு பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில் இராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டு இருந்த நிலையில் குறித்த பதற்றமான பகுதியை கண்காணிக்க இராணுவ தளபதி உள்பட பலர் விமானத்தில் அங்கு சென்றுள்ளனர்.

ரொறன்ரோவில் வசிப்போருக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

வெடித்த விமானம்

இதன்போது அவர்கள் சென்ற அந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறியுள்ளது.

இதில் மூத்த இராணுவ தளபதி பிரான்சிஸ் ஓகொல்லா(Francis Okolla) உள்பட 11 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு அதிபர் வில்லியம் ரூடோ(William Rudo) மற்றும் தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு(Samia Suluhu Hassan) உட்பட பலர் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் அதிபரை படுகொலை செய்ய ரஷ்யா தீட்டிய திட்டம் அம்பலம்

தீவிர விசாரணை

அத்தோடு நாடு முழுவதும் மூன்று நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் எனவும் அதிபர் வில்லியம் ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானிய அதிபரின் வருகை: சர்வதேச புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பில் இலங்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version