Home உலகம் ட்ரம்பின் கடும் வரி விதிப்பு: ஹொலிவுட் திரைப்படங்களில் கை வைத்த சீனா

ட்ரம்பின் கடும் வரி விதிப்பு: ஹொலிவுட் திரைப்படங்களில் கை வைத்த சீனா

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) கூடுதல் வரி விதிப்புக்கு எதிரொலியாக ஹொலிவுட் திரைப்படங்களுக்கு (Hollywood Movies) சீன அரசு (China) தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளன.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 54% வரி விதித்த ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சீன அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் ஹொலிவுட்டில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள், சீனாவில் அதிக அளவிலான வசூலைக் குவிக்கின்றன.

ஹொலிவுட் திரைப்படம்

அமெரிக்காவை விட சீனாவில் குறிப்பிடதக்க இலாபத்தைப் பெறும் ஹொலிவுட் திரைப்படங்களும் இருந்துவருகின்றன.

மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாகத் திரையரங்குகளில் ஹொலிவுட் திரைப்படங்கள் வெளியாகின்றன.

ஹொலிவுட் படங்கள் உலகளவில் செய்யும் வசூலில் 10% சீனாவில் இருந்து மட்டும் கிடைக்கிறது.

இதனிடையே ஹொலிவுட் திரைப்படங்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது.

இதற்கு முன்பு மேற்கொண்ட ஒப்பந்தங்களின் படி, சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள், ஹொலிவுட் படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விநியோகப் பணிகளைச் செய்துவந்தனர்.

வருவாய் பகிர்வின் அடிப்படையில் ஆண்டுக்கு புதிதாக 34 வெளிநாட்டுத் திரைப்படங்கள் சீனாவில் வெளியிடப்பட்டு வருகிறது.

சீனாவின் தடை

இதற்கான டிக்கெட் விற்பனையில் 25% வருவாய் சீன அரசுக்குச் செல்வதுடன் சிறிய தொகையில் எடுக்கப்படும் படங்கள், இந்த விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு உள்ளூர் விநியோகஸ்தரால் வெளியிடப்படுகிறது.

சீனாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் வணிகத்தில், திரைப்படத் துறையும் ஒன்றாக உள்ளது.

தற்போது அமெரிக்கா விதித்துள்ள திருத்தப்பட்ட வரி விதிப்பின் மூலம் திரைப்பட வணிகத்தில் இரு நாடுகளுக்கு இடையே பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version