Home உலகம் கனடாவில் வீடு விற்பனை அதிகரிப்பு : வெளியான தகவல்

கனடாவில் வீடு விற்பனை அதிகரிப்பு : வெளியான தகவல்

0

கனடாவில் (Canada) ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பிராந்திய வீட்டு மனை சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளது.

வீடுகள் விற்பனை

கடந்த நவம்பர் மாதம் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் 5875 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது சுமார் 40 வீத அதிகரிப்பாகும்.

கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது நவம்பர் மாதத்தில் வீடு விற்பனை இரண்டு வீதத்தினால் அதிகரித்துள்ளது.

வீடுகளின் விற்பனை விலையானது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது சுமார் 2.6 வீதத்தினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version