Home உலகம் ஹமாஸ் உறுப்பினரின் நெற்றியில் முத்தமிட்ட பணயக்கைதி : வைரலாகும் காணொளி

ஹமாஸ் உறுப்பினரின் நெற்றியில் முத்தமிட்ட பணயக்கைதி : வைரலாகும் காணொளி

0

இஸ்ரேல் (Israel) , ஹமாஸ் (Hamas) இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்து வருகிறது.

அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.

இதற்கிடையே, போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் இஸ்ரேலிய பணயக்கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் அமைப்பினர் நேற்று விடுதலை செய்தனர்.

இந்நிலையில்,பணயக்கைதிகளில் ஒருவரான ஒமர் ஷேம் என்பவர் தங்களை அழைத்து வந்த ஹமாஸ் அமைப்பினரில் இரண்டு பேரை நெற்றியில் முத்தமிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் காணொளிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

https://www.youtube.com/embed/XzdMPt4rn1k

NO COMMENTS

Exit mobile version