Home உலகம் அமெரிக்காவில் பரபரப்பு: முக்கிய அரசியல்வாதி படுகொலை

அமெரிக்காவில் பரபரப்பு: முக்கிய அரசியல்வாதி படுகொலை

0

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியின் முக்கிய அரசியல்வாதியான மெலிசா ஹோர்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது, அவர்களது வீட்டில் இன்று (14.06.2025) இடம்பெற்றுள்ளது.

தப்பியோடிய துப்பாக்கிதாரி

காவல்துறை அதிகாரி போல வேடமணிந்து வந்த ஒருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, சந்தேக நபர் காவல்துறையினரன் வாகனம் போன்ற ஒரு காரில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

அரசியல் காரணம்

அதே நேரத்தில், மாநில செனட்டராக இருக்கும் ஜோன் ஹோஃப்மேன் மற்றும் அவரது மனைவியும் தங்கள் வீட்டில் நடத்தப்பட்ட தனித்தனி தாக்குதலில் பலமுறை சுடப்பட்டு, ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல்கள் அரசியல் காரணங்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர், குற்றவாளியை கைது செய்ய தீவிர தேடுதல் நடந்து வருகிறது.

NO COMMENTS

Exit mobile version