Home உலகம் கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

0

கனடாவில்(Canada) வீட்டு வாடகைகள் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக குறைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன.

Rentals.ca மற்றும் Urbanation வெளியிட்ட அறிக்கையின்படி, பெப்ரவரியில் வாடகைகள் 4.8% வீழ்ச்சி கண்டுள்ளது.

அதன்படி, பெப்ரவரி மாதத்தின் சராசரி வாடகை 2,088 டொலராக குறைந்துள்ளது.

குறைவடைந்த வாடகை

இது ஏப்ரல் 2021க்கு பின்னர் பதிவான அதிகளவு வாடகைத் தொகை குறைவு இதுவென்பது குறிப்பிடப்படுகிறது.

கட்டுமானம் அதிகரித்துள்ளதால் வீடுகள் அதிகளவில் நிரம்பல் செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள்தொகை வளர்ச்சி மந்தமாகியுள்ளதாகவும் இதனால் வாடகை குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவுடன் வர்த்தக போர் காரணமாக பொருளாதார சிக்கல்கள் உருவாகியுள்ளமையும வாடகை வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அதிகபட்ச வாடகைத் தொகை

ஒண்டாரியோ மாகாணத்தில் அதிகபட்ச வாடகைத் தொகை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அடுக்குமாடி வாடகை 4.2% குறைந்து 2,329 டொலர்களாகவும், பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் 1% வீழ்ச்சி கண்டு 2,457 டொலர்களாகவும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், சராசரி வாடகை தொகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்டதை விட 5.2% அதிகம் எனவும், கோவிட் காலத்துடன் ஒப்பீடு செய்யும் போது 16.9% உயர்வினையும் பதிவு செய்துள்ளது. 

you may like this…!

https://www.youtube.com/embed/NFTrHdbTesA

NO COMMENTS

Exit mobile version