Home உலகம் இஸ்ரேல் பெரும் தோல்வி.! தடைகளை தகர்த்தி கொண்டு நுழைந்த பயங்கர ஏவுகணை

இஸ்ரேல் பெரும் தோல்வி.! தடைகளை தகர்த்தி கொண்டு நுழைந்த பயங்கர ஏவுகணை

0

ஈரான் ஆதரவு பெற்ற ஏமனில் செயற்பட்டு வரும் ஹவுதி அமைப்பு, இஸ்ரேலின் மிக முக்கிய பென் குரியன் விமான நிலையத்திற்கு அருகில் பாலஸ்டிக் ஏவுகணை தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதலை முறியடிக்க இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலிய விமானப்படையின் வான்வழி பாதுகாப்பு அணி, முறியடிப்பு முயற்சிகளில் ஏற்பட்ட தோல்வி குறித்து விசாரணை நடத்தி வருகிறதாகவும் விமான நிலையப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பிலும் விசாரணை நடந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலின் விளைவு

இதன்படி, ஹவுதி அமைப்பின் இந்த தாக்குதலுக்கு ஏழு மடங்கு வலுவாக பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் உறுதியளித்துள்ளது.

விமான நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் விழுந்ததால் சுமார் எட்டு பேர் காயமடைந்ததுள்ளதுடன், ஏவுகணை விழுந்த பகுதியில் சுமார் 25 மீற்றர் பாரிய பள்ளமும் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு, வான்வெளி சுமார் ஒரு மணி நேரம் மூடப்பட்டதாகவும், ஆனால் சிறிது நேரத்திலேயே விமான நிலையம் அதன் வான்வெளியை மீண்டும் திறந்து புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல்களை தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹவுதியின் தாக்குதல் திறன்

ஹவுதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில், இஸ்ரேல் ஏமன் மீது பதிலடித் தாக்குதல்களைத் தொடங்குவதைத் தவிர்த்து வருகிறது, ஏனெனில் ஹவுதிக்கு எதிராக அமெரிக்கா பரந்த இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும், ஹவுதி தலைவர்கள் இஸ்ரேல் மீதான இந்தத் தாக்குதலை தங்கள் நீண்ட தூர தாக்குதல் திறனை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாக பாராட்டி வருவதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், இஸ்ரேலுடனான மோதலில் தங்கள் அமைப்புக்கு சிவப்புக் கோடுகள் இல்லை என சிரேஷ்ட ஹவுதி அதிகாரி முகமது அல்-புகைதி குறித்த தாக்குதலுக்கு பிறகு தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version