Home உலகம் அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்

அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்

0

அமெரிக்காவிற்கு(us) சுற்றுலா சென்ற ஹைதராபாத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட குடும்பத்தினர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேஜஸ்வினி, ஸ்ரீ வெங்கட் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என மொத்தம் நான்கு பேர் இந்த சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

உறவினர்களைப் பார்த்துவிட்டு திரும்பும்போது அனர்த்தம்

அட்லாண்டாவில் உள்ள தங்கள் உறவினர்களைப் பார்த்துவிட்டு 4 பேரும் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் சென்ற கார் பாரவூர்தி மீது மோதி தீ பற்றியதில் உடல் கருகி உயிரிழந்தனர்.

 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நேரத்தில், வாகனத்தின் உள்ளே எலும்புகள் மட்டுமே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காக ஹைதராபாத்திற்கு கொண்டு வரப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version