அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ள சலுகையொன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
அமெரிக்காவில் குடியேறியுள்ள சட்டவிரோத வெளிநாட்டவரை திருப்பி அனுப்ப உதவுபவர்களுக்கு இந்த சலுகை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு உதவுபவர்களுக்கு ஒரு மாதத்துக்கு இலவசமாக பீர் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய சலுகை
அமெரிக்காவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய சலுகைகளை வழங்ககூடிய நிறுவனமொன்றே இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், இடஹோவில் உள்ள சட்டவிரோத குடியேறியை அமெரிக்க குடியுரிமை அதிகாரியிடம் அடையாளம் காண்பித்து நாடு கடத்த உதவினால் அவர்களுக்கு ஒரு மாதம் இலவச பீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
