Home உலகம் ஈரான் இராணுவத்தின் வெளியே தெரியாத பிரேக்கிங் பொயின்ட் !

ஈரான் இராணுவத்தின் வெளியே தெரியாத பிரேக்கிங் பொயின்ட் !

0

ஈரான் (Iran) இராணுவத்தின் “பிரேக்கிங் பொயின்டை” இஸ்ரேல் (Israel) நெருங்கிவிட்டதன் காரணமாகத்தான் இஸ்ரேல் மற்றும் ஈரான் யுத்தத்தை அமெரிக்கா (United States ) இடை நிறுத்தியதாக தெரிவிக்கின்றனர் சில மேற்குலக ஆய்வாளர்கள். 

இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைகள் ஈரானின் முக்கிய இராணுவ கட்டமைப்புகளில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்ததாகக் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக குத்ஸ் படை தலைமையகம், இராணுவக் களஞ்சியங்கள் மற்றும் வான்படைக் கட்டுப்பாட்டுக் கட்டிடங்கள் என பல இடங்களில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த தாக்குதல்களால் ஈரான் இராணுவம் உட்பட அதன் பாதுகாப்பு மற்றும் பதிலடி திறனில் பெரும் அதிர்ச்சியும் தளர்ச்சியும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், ஈரான் எதிர்வினை காட்ட முற்பட்டால் அது மத்திய கிழக்கு முழுவதற்கும் பரவக்கூடிய பரபரப்பான நிலையை உருவாக்கும் பாரிய அபாயத்தை ஏற்படுத்தும்.

இத்தகைய அபாய நிலையை உணர்ந்த அமெரிக்கா, எதிர்காலத்தில் மத்திய கிழக்கில் உருவாகக்கூடிய விரிவான போர் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார, மனிதாபிமான விளைவுகளை தடுக்கும் நோக்கில் இரு நாடுகளையும் உடனடி இடைநிறுத்தத்திற்கு அழுத்தம் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில்,

  1. இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் ஈரானில் ஏற்படுத்தியிருந்த பாதிப்புகள் பற்றியும்,
  2. அந்தப் பாதிப்புக்களினால் மத்தியகிழக்கிற்கு ஏற்பட இருந்த ஆபத்துப் பற்றியும்,
  3. அமெரிக்கா எதற்காக வலிந்து இஸ்ரேல் ஈரான் யுத்தததை நிறுத்தியது என்பது குறித்த விரிவான பிண்ணனி தொடர்பிலும் முழுமையாக ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/qXD3liPt7jI

NO COMMENTS

Exit mobile version