Home உலகம் காசாவில் ஹமாஸுக்கு பேரிடி: சுற்றிவளைத்து முற்றாக முடக்கிய இஸ்ரேல்

காசாவில் ஹமாஸுக்கு பேரிடி: சுற்றிவளைத்து முற்றாக முடக்கிய இஸ்ரேல்

0

வடக்கு காசாவின் கமால் அத்வான் மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹமாஸுக்கு எதிரான தனது நடவடிக்கையை முடித்துவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

இதன்போது, ஒக்டோபர் 7, 2023 தாக்குதலுடன் தொடர்புடைய மருத்துவ மையத்தின் இயக்குநர் மற்றும் 15 பயங்கரவாதிகள் உட்பட 240 பயங்கரவாத செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

உளவுத்துறை தகவல்கள்

மருத்துவமனைகளை இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பலமுறை அழைப்பு விடுத்திருந்த போதிலும், ஹமாஸ் பயங்கரவாதக் கோட்டையாகவும் பயங்கரவாதிகளின் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்படும் மருத்துவமனையின் உளவுத்துறை தகவல்கள் தன்னிடம் இருப்பதாக IDF கூறியுள்ளது.

சோதனையின் தொடக்கத்தில், 401 வது கவசப் படையின் துருப்புக்கள் மருத்துவமனையைச் சுற்றி வளைத்து, பயங்கரவாத குழுக்களின் பல உறுப்பினர்களைத் தடுத்து நிறுத்தி, துப்பாக்கி ஏந்தியவர்களைக் கொன்றதாக IDF குறிப்பிட்டுள்ளது.

ஆயுதங்கள்

இஸ்ரேல் கடற்படையின் Shayetet 13 கமாண்டோ பிரிவின் உறுப்பினர்கள் பின்னர் மருத்துவமனைக்குள் துல்லியமான சுற்றிவளைப்புகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதன்போது, அவர்கள் கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற இராணுவ உபகரணங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கண்டுபிடித்து கைப்பற்றினர் என்று IDF தெரிவித்துள்ளது.

ஹமாஸ், பலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பயங்கரவாத குழுக்களின் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் 240 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையின் மத்தியில் தடுத்து வைக்கப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version