Home உலகம் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது அமெரிக்க அரசு எடுத்துள்ள தீர்மானம்!

சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது அமெரிக்க அரசு எடுத்துள்ள தீர்மானம்!

0

அமெரிக்காவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கண்டறிந்து அவர்களை தமது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை(US Department of Homeland Security) நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை கண்டறிந்து, 495 விமானங்கள் மூலம் 145 நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள்

குறிப்பாக கொலம்பியா, ஈகுவேடார், பெரு, எகிப்து, மொரிடேனியா, செனெகல், உஸ்பெகிஸ்தான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அரசின் தீவிர நடவடிக்கைகளை தொடர்ந்து அமெரிக்காவின் தென்மேற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருவதுடன் இதற்காக ஒரு தனி விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், அமெரிக்காவில் குடியேற சட்டப்பூர்வமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version