Home உலகம் திருத்தந்தை போப் பிரான்சிஸ் கல்லறை : வெளியான முதல் புகைப்படம்

திருத்தந்தை போப் பிரான்சிஸ் கல்லறை : வெளியான முதல் புகைப்படம்

0

நித்திய இளைப்பாரிய போப் பிரான்சிஸ் கல்லறையின் முதல் புகைப்படங்கள் மற்றும் நேரடி காட்சிகள் வெளியாகியுள்ளன.

உலகளவில் அறியப்பட்ட பரிசுத்த பாப்பரசர் 88 வயதில் நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு கடந்த 21ஆம் உயிர்நித்தார்.

பின்னர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் வத்திக்கான் (Vatican) நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்றது.

திருத்தந்தையின் கல்லறை

அதன்பின், ரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற சாண்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் திருத்தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் போப் பிரான்சிஸ் அவர்களின் கல்லறை தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக திறக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸ் அவர்களின் கல்லறையில், “பிரான்சிஸ்கஸ்” (Franciscus) என்ற எளிய லத்தீன் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைபடங்களை பார்க்கும் போது, போப் பிரான்சிஸ் அவர்களின் எளிய, வெள்ளை நிற கல்லறையை ஒரு வெள்ளை ரோஜா அலங்கரிக்கிறது.

மென்மையான மற்றும் சூடான ஒளி, கல்லறையை ஒளிரச் செய்கிறது.போப் பிரான்சிஸ் அவர்களின் பெக்டோரல் சிலுவையின் பிரதிபலிப்பு, கல்லறைக்கு மேலே உள்ள சுவரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version