பிரித்தானியாவில்(Uk) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல தொடருந்துகள் ரத்து செய்யப்படலாம் அல்லது தொடருந்து நேரம் மாற்றி அமைக்கப்படலாம் என அந்நாட்டு தேசிய தொடருந்து அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரித்தானியா முழுவதும், உள்ள தொடருந்து சாரதிகள் மற்றும் சிக்னல் ஆபரேட்டர்களை இணைக்கும் தொடர்பு அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய தேசிய தொடருந்து அமைப்பான (National Rail) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, பல தொடருந்துகள் ரத்து செய்யப்படலாம் அல்லது தொடருந்து நேரம் மாற்றி அமைக்கப்படலாம் என பிரித்தானியாவின் தேசிய தொடருந்து அமைப்பு தெரிவித்துள்ளது.
தொடருந்து சேவை
இது தொடர்பில் குறித்த அமைப்பு தெரிவிக்கையில், “பிரித்தானியா முழுவதும் தொடருந்து சாரதிகள் மற்றும் சிக்னல் ஆபரேட்டர்களை இணைக்கும் தொடர்பு அமைப்பில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக பிரித்தானியாவின் தேசிய தொடருந்து (National Rail) சேவையில் இன்று இடையூறு ஏற்படலாம்.
எனவே, பயணிகள் தங்கள் பயணம் தொடர்பில் முன்கூட்டியே விசாரித்து அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுங்கள்” என பிரித்தானியாவின் தேசிய தொடருந்து அமைப்பு தெரிவித்துள்ளது.