எதிர்வரும் ஆண்டு முதல் பிரித்தானிய (United Kingdom) விசா திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் அயர்லாந்து (Ireland) குடியுரிமை உடையவர்களை தவிர ஏனைய அனைவரும் 2025ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவிற்கு வருவதற்கு முன்பே அனுமதி பெற வேண்டும் ஒய்வெட் கூப்பர் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நவம்பர் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிகளின் படி, பிரித்தானியாவிற்கு விசா இல்லாமல் வரும் பயணிகள், 10 யூரோ என்ற கட்டணத்தை செலுத்தி, முன்னதாக அனுமதி பெற வேண்டும்.
மின்னணு பயண அனுமதி
பிரித்தானியாவின் முந்தைய அரசு அறிமுகப்படுத்திய ‘Electronic Travel Authorization’ என்ற மின்னணு பயண அனுமதி திட்டத்தின் மூலம் தற்காலிகமாக பிரித்தானியா வழியாக பயணிக்கும் பயணிகள் முன்பே அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அண்மையில், கத்தார் (Qatar), குவைத் (Kuwait), ஒமான் (Oman), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates), சவுதி அரேபியா (Saudi Arabia) மற்றும் ஜோர்டான் (Jordan) ஆகிய நாடுகளின் குடியுரிமையாளர்கள் ETA க்கு விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிற நாடுகளின் குடியுரிமையாளர்களுக்கான கட்டாயம் 2025ல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.