புதிய எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பிரித்தானிய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை (EV) அதிகம் வாங்க ஊக்கமளிக்கும் புதிய சலுகைகளை விரைவில் அறிவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் போக்குவரத்துத்துறை செயலாளர் ஹைடி அலெக்ஸாண்டர், இந்த வாரம் புதிய EV ஊக்கத்திட்டங்களை அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நிதி உதவிகள்
இருப்பினும், 700 மில்லியன் பவுண்டு மதிப்பில் புதிய உதவித் தொகை மற்றும் நிதி உதவிகள் வழங்கப்படும் என்ற செய்தி குறித்து அவர் பதிளலிக்க அவர் மறுத்துள்ளார்.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் குறைவான செலவில் மாற்றம் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காற்று மாசு
இதன் ஒரு பகுதியாக, வீட்டுவாசல்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து தளங்களில் மின்சார சார்ஜிங் வசதிகளை உருவாக்க 63 மில்லியன் பவுண்டு முதலீடு செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டங்கள், EV வாகனங்களை ஏற்கும் விகிதத்தை உயர்த்தவும், காற்று மாசுபாட்டை குறைக்கவும் மற்றும் பிரித்த்தானியாவை பசுமை போக்குவரத்துக்கான முன்னோடியாக மாற்றவும் உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
