Home உலகம் பயணிகளால் நிரம்பி வழியும் துபாய் சர்வதேச விமான நிலையம்: காரணம் இது தான்..

பயணிகளால் நிரம்பி வழியும் துபாய் சர்வதேச விமான நிலையம்: காரணம் இது தான்..

0

துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு (Dubai International Airport) தினமும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமீரகத்தின் (Emirates) பல்வேறு பகுதிகளில் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுதாக தெரிவிக்கப்படுகிறது.

2 லட்சத்து 86 ஆயிரம் பேர்

இதன் படி, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றையதினத்தில் மாத்திரம் சுமார் 2 லட்சத்து 86 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

அத்துடன், கடந்த 12 ஆம் திகதி வரையில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் 8 லட்சத்து 40 ஆயிரம் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணிகள் கூட்டம்

இதன் காரணமாக விமான நிலையத்தில் பயணிகளுக்கான சேவையை விரைவுபடுத்தும் வகையில் ஊழியர்கள் அதிக அளவு பணியமர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமீரகத்தின் பிற பகுதிகளில் உள்ள பிரதான விமான நிலையங்களான அபுதாபி, சார்ஜாவில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version