Home உலகம் இந்தியாவில் தொன் கணக்கில் தங்கம் கண்டுபிடிப்பு: அடித்த ஜாக்பாட்

இந்தியாவில் தொன் கணக்கில் தங்கம் கண்டுபிடிப்பு: அடித்த ஜாக்பாட்

0

இந்தியாவில் (India) சமீபத்தில் தொன் கணக்கில் தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கவான்-கேவ்லாரி பகுதியில் தங்கம் செம்பு மற்றும் பல கனிமங்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

டன் கணக்கில் தங்கம்

இப்பகுதியில் சுமார் 100 ஹெக்டர் பரப்பளவில் தங்கம் பரவியிருக்கலாம் என்றும், தொன் கணக்கில் தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக இந்த ஆண்டில், பாகிஸ்தான் அதன் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டோக் மாவட்டத்தில் ரூபாய் 80,000 கோடி (PKR) மதிப்பிலான தங்கம் இருப்பதாக கண்டுபிடித்தது.

அதேபோல், 2025 ஜனவரியில் சீனாவின் வடமேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் 168 மெட்ரிக் டன் தங்கம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக 2024 நவம்பரில் ஹுனான் தங்க சுரங்கத்தில் 1000 தொன் தங்கம் கண்டிபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version