Home உலகம் தண்ணீரில் இயங்கப்போகும் தொடருந்துகள் : இந்தியா படைக்கப்போகும் சாதனை

தண்ணீரில் இயங்கப்போகும் தொடருந்துகள் : இந்தியா படைக்கப்போகும் சாதனை

0

உலகின் மிகப்பெரிய தொடருந்து சேவையில் இந்திய(india) தொடருந்து சேவையும் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள நீண்ட தூர போக்குவரத்து பயணத்திற்கு இந்திய தொடருந்துகள் தான் முதுகெலும்பாக உள்ளன.

குறைந்த விலையில் சொகுசுடன் நீண்ட தூரம் பயணிக்க ஏற்றதாக இவை இருப்பதால் மக்கள் பலர் அதிகம் தொடருந்துகளில் பயணிக்க விரும்புகிறார்கள்.

 புதிய தொடருந்துகள் அறிமுகம்

இந்திய தொடருந்து திணக்களம் தனது தொடருந்து சேவையை மேம்படுத்தி, பயணிகளின் வசதிக்காக புதிய தொடருந்துகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இதற்கு சிறந்த உதாரணம்.

இந்த நிலையில் தண்ணீரில் இயங்கும் ஹைட்ரஜன் தொடருந்தை உருவாக்க இந்திய தொடருந்து நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகள் எல்லாம் நடந்து வரும் நிலையில் இந்த தொடருந்து பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய தொடருந்து நிர்வாகத்தின் அடுத்த மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என பேசப்படுகிறது.

சிறப்பு நீர் சேமிப்பு வசதிகள்

இந்த தொடருந்துகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 40,000 லீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது, மேலும் இந்த இயக்கத்திற்கு ஆதரவாக சிறப்பு நீர் சேமிப்பு வசதிகள் கட்டப்படும்.

ஹைட்ரஜன் தொடருந்து பைலட் திட்டத்தை 2024 டிசம்பரில் தொடங்க இந்தியா நம்புகிறது.

ஹைட்ரஜனில் இயங்கும் 35 தொடருந்துகளை நாடு முழுவதும் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய்

அதன் பொறியாளர்கள் ஏற்கனவே ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை நிறுவி உள்கட்டமைப்பை ஆதரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹைட்ரஜன் மின் உற்பத்தி நிலையங்களுக்கான திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொடருந்து செய்தித் தொடர்பாளர் திலீப் குமார் கூறுகையில், ஒரு ஹைட்ரஜன் தொடருந்தின் விலை சுமாராக இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version