Home உலகம் சீன உளவு கப்பலுக்கு மீண்டும் அனுமதியளித்த மாலைதீவு: உற்று கவனிக்கும் இந்தியா

சீன உளவு கப்பலுக்கு மீண்டும் அனுமதியளித்த மாலைதீவு: உற்று கவனிக்கும் இந்தியா

0

இந்திய – மாலைதீவு உறவில் விரிசல்கள் விழுந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் மாலைதீவு, சீனாவின் உளவு கப்பலுக்கு (Xiang Yang Hong 03) அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் மாலைதீவு மற்றும் சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா உற்று கவனித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாலைதீவின் புதிய அதிபராக முகம்மது முய்சு பதவியேற்றதில் இருந்து இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது.

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிவர்களின் எண்ணிக்கை

சீனாவுடன் அதீத நெருக்கம்

அத்தோடு, முகம்மது முய்சு சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என்பதால் சீனாவுடன் அதீத நெருக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்பில் மாலைதீவு அமைச்சர்கள் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தன.

அதனை தொடர்ந்து, இந்திய இராணுவ வீர்களை மாலைதீவில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அதிபர் உத்தரவிட்டார்.

சீன கப்பலுக்கு அனுமதி

இந்தியாவுடனான முறுகல் நிலை அதிகரித்துள்ள நிலையில் தற்போது மாலைதீவு மீண்டும் சீன உளவு கப்பலுக்கு அனுமதியளித்துள்ளது.

அத்துடன், குறித்த கப்பல் எந்த ஆய்வுகளை மேற்கொள்ளாது என்றும் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாத்திரமே துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக மாலைதீவு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் பிரதமர் விரைவில் கைது: கவலை வெளியிட்ட அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version