Home உலகம் அதிகரிக்கும் முறுகல் : கனடா தூதுவருக்கு இந்தியா அழைப்பாணை

அதிகரிக்கும் முறுகல் : கனடா தூதுவருக்கு இந்தியா அழைப்பாணை

0

கனடாவில்(canada) சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீதான தாக்குதலின் பின்புலத்தில் இந்திய(india) மத்திய அமைச்சர் அமித்ஷாவின்(amit shah) தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கனடா தூதுவருக்கு இந்தியா அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் இருநாடுகளும் தூதுவர்களை பரஸ்பரம் வெளியேற்றினர்.

 அமித் ஷா மீதான கனடாவின் குற்றச்சாட்டு

இதனிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மொரிசன் குற்றஞ்சாட்டினார்.

இந்திய வெளியுறவுத்துறை அழைப்பாணை

இந்நிலையில், சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் விவகாரத்தில் அமித்ஷா மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்து கனடா தூதுவருக்கு இந்திய வெளியுறவுத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version