Home முக்கியச் செய்திகள் சிம்பாப்வேக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட மூன்று முக்கிய வீரர்கள்

சிம்பாப்வேக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட மூன்று முக்கிய வீரர்கள்

0

சிம்பாப்வேக்கு (Zimbabve) எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்கான இந்திய (India) குழாமில் இருந்து மூன்று வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் பேரவை (BCCI) தெரிவித்துள்ளது.

அந்தவகையில், வருகின்ற ஆறாம் திகதி ஆரம்பமாகவுள்ள போட்டியில் முற்றிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் அணியில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) சிவம் தூபே (Shivam Dube) ஜெய்ஸ்வால் (Jaiswal) ஆகியோரும் இடம் பிடித்திருந்தார்கள்.

ஆனால் தற்போது இந்த மூன்று வீரர்களையும் இந்திய கிரிக்கெட் பேரவை அதிரடியாக நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சூறாவளி எச்சரிக்கை

இதற்கான காரணத்தை தெரிவிக்கையில், “ உலக கோப்பையை வென்ற இந்திய அணி இன்னும் நாடு திரும்பவில்லை. பார்படாசில் (Barbados) சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டிருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் பார்படாசில் உள்ள ஹோட்டலில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

இதனால் இந்த அணியில் இருக்கும் சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வால் ஆகிய வீரர்கள் தற்போது சிம்பாப்வேக்கு வரமுடியாத சூழலில் இருக்கிறார்கள்.

இந்த சூழலில் இந்தியா, சிம்பாப்வே ஹராரேவில் (Harare) தொடங்கவிருக்கும் இந்த போட்டிகளுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் இந்த மூன்று வீரர்களும் வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

பரிசளிக்கும் நிகழ்ச்சி

மேலும் இந்தியாவில் உலகக்கோப்பை வென்ற வீரர்களுக்கு பரிசு அளிக்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற இருக்கிறது. இதற்கு இந்த மூன்று வீரர்களும் நிச்சயம் இடம்பெற வேண்டும். இதன் காரணமாக தான் பிசிசிஐ (BCCI) தற்போது இந்த மாற்று ஏற்பாடு செய்திருக்கிறது” என கூறியுள்ளது.

இதன்படி தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சனுக்கு (Sai Sudharshan) சிம்பாப்வே தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சாய் சுதர்சன் தொடக்க வீரராக சிறப்பாக ஐபிஎல் (IPL) தொடரில் செயல்பட்டு இருக்கிறார். இதனால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழக வீரர்

இதேபோன்று விக்கெட் கீப்பர் ஜித்தேஸ் சர்மா (Jitesh Sharma) மற்றும் வேக பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா (Harshit Rana) ஆகியோருக்கும் சிம்பாப்வே தொடரில் மாற்று வீரர்களாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த தொடருக்கு தமிழக வீரர் முதலில் பரிந்துரை செய்யப்படாத நிலையில் தற்போது மீண்டும் இடம் பிடித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

NO COMMENTS

Exit mobile version