Home முக்கியச் செய்திகள் தரம் 9 மாணவர்களின் கல்வி முறைமையில் மாற்றம் : கல்வியமைச்சர் அறிவிப்பு

தரம் 9 மாணவர்களின் கல்வி முறைமையில் மாற்றம் : கல்வியமைச்சர் அறிவிப்பு

0

மாணவர்களுக்கு பாடசாலை பருவத்திலிருந்தே தொழில்முனைவு பற்றிய புரிதலும், பயிற்சியும் வழங்கப்பட வேண்டும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாற்றமடையும் புதிய கல்வி முறையின் மூலம், 9ஆம் தரத்தில் படிக்கும் மாணவர்கள் பெற்றோருடன் கலந்தாலோசித்து எதிர்கால வாழ்க்கையைத் தெரிவு செய்ய வாய்ப்பளிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அறிவு, மனப்பான்மை மற்றும் திறன்களைக் கொண்ட பிரஜையை உருவாக்குவது கல்வியின் அடிப்படை நோக்கம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முன்பள்ளிக் கல்வி

சிறுவர்களுக்கு முன்பள்ளிக் கல்வியில் இருந்தே திறன்கள் மற்றும் மனப்பான்மைகளை வளர்ப்பதற்குத் தேவையான அடித்தளத்தைத் தயாரிப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

அதற்காக யுனெஸ்கோ (UNESCO), தேசிய கல்வி நிறுவனம் (NIE) மற்றும் பிற அறிஞர்களின் ஒத்துழைப்புடன் ஒரு திட்டம் தொடங்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில் எதிர்காலத்தில் பாடசாலைகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version