Home உலகம் ஜெலன்ஸ்கியை சந்தித்த மோடி: உக்ரைன் போர் குறித்து வெளியிட்ட பதிவு

ஜெலன்ஸ்கியை சந்தித்த மோடி: உக்ரைன் போர் குறித்து வெளியிட்ட பதிவு

0

 ஜி-7 மாநாட்டிற்கு வருகை தந்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi ) சந்தித்து பேசியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் பிரதமர் மோடி, தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

எக்ஸ் பதிவு

அந்த பதிவில், “உக்ரைன் (Ukraine) அதிபர் ஜெலென்ஸ்கியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பு நடைபெற்றது.

உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா (India) ஆர்வமாக உள்ளது.

அத்துடன், போரில் மனிதாபிமானத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையை இந்தியா நம்புகிறது என்றும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அமைதிக்கான வழி ஏற்படும் என்றும் வலியுறுத்தினேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி-7 மாநாடு

இந்த நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி-7 மாநாடு இத்தாலியில் இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில், ஜி-7 மாநாட்டை தலைமையேற்று நடத்தும் இத்தாலி அரசு, இந்தியா உள்பட 12 வளரும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version