Home உலகம் அமெரிக்க காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர்

அமெரிக்க காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர்

0

அமெரிக்காவில் (United States) இந்திய (India) மாணவர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து வந்த முகமது நிஜாமுதீன் (வயது 30) எனும் மாணவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புளோரிடா கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கத்தியால் குத்தி

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த குறித்த மாணவர், படித்து கொண்டே கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்தும் வந்துள்ளார்.

இந்த நிலையில், விடுதி அறையில் உடன் இருந்தவரை கத்தியால் குத்தியதற்காக அவரை அமெரிக்க காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளியிட்டுள்ள அறிக்கை

இது தொடர்பில் அமெரிக்க காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாண்டா கிளாராவில் உள்ள விடுதியில் உடன் இருந்தவரை நிஜாமுதீன் கத்தியால் குத்தியுள்ளார்.

அறையில் இருந்த நண்பரை பல முறை கத்தியால் குத்தி நிஜாமூதின் காயப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறையின் அவசர எண் 911 இற்கு தகவல் கிடைத்தது.

கூட்டு விசாரணை

உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்ததில், அறையில் ஒருவர் கத்தியுடன் மற்றொருவரை பிடித்து வைத்திருந்ததால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

உடனடியாக இருவரும் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், நிஜாமூதின் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அறையில் காயங்களுடன் மீட்கப்பட்டவர் சிகிச்சையில் உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சாண்டா கிளாரா மாவட்ட நீதிமன்றமும், சாண்டா கிளாரா காவல் துறையும் கூட்டு விசாரணையை நடத்தி வருகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version