லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, அங்கு வசிக்கும் இலங்கையர்களுடன் தூதரம் நெருங்கிய தொடர்பிலுள்ளதாகவும் தூதுவர் கபில ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 7,600 இலங்கை பணியாளர்கள் லெபனானில் பணி புரிந்து வருவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் நாட்டின் தெற்குப் பகுதிகளில் வசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வான்வழித் தாக்குதல்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹிஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து, லெபனானின் வட பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது.
இந்தநிலையில், மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் இலங்கையர்கள் வசிக்கவில்லை எனவும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 600 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதல்களுக்கு லெபானும் பதிலடி வழங்க ஆரம்பித்துள்ளதால், அப்பகுதியில் மோதல் நிலைமை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.