Home இலங்கை அரசியல் சர்ச்சையை கிளப்பிய கம்மன்பில: அநுர மீதான கர்தினாலின் நிலைப்பாடு

சர்ச்சையை கிளப்பிய கம்மன்பில: அநுர மீதான கர்தினாலின் நிலைப்பாடு

0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நேர்மையான விசாரணைகளை மேற்கொள்வார் என தாம் நம்புவதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) தேரர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உதய கம்மன்பில (Udaya Gammanpila) வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் கொழும்பில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு நீதி அவசியம் என்றும், இதில் கட்சியோ, நபரோ முக்கியமில்லை என்றும் கர்தினால் கூறியுள்ளார்.

உதய கம்மன்பிலவின் செயற்பாடு

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வழங்குமாறு தற்போதைய ஜனாதிபதியிடம் கேட்டதாகவும், அவரும் உண்மைகளை மறைக்க இடமளிக்மாட்டேன் உன உறுதியளித்தாக கர்தினால் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் வலியுறுத்தியதோடு, உதய கம்மன்பில இந்த விடயம் குறித்த இவ்வாறு நாடகமொன்று அரங்கேற்றியிருப்பது வருத்தமிளப்பதாகவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார். 

சர்ச்சை

முன்னாள் ஜனாதிபதி ரணில் அரசாங்கத்தின் போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகள் தற்போதைய அரசாங்கம் மறைக்க முயல்வதாக கூறி
உதய கம்மன்பில இரண்டு அறிக்கைகளில் ஒன்றை நேற்றையதினம் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

அத்தோடு, மற்றைய அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடவிருப்பதாகவும் நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அனைவராலும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

 

NO COMMENTS

Exit mobile version