Home இலங்கை சமூகம் நாட்டு மக்களின் தவறான செயல்! பொலிஸார் வெளியிட்ட அவசர அறிவிப்பு

நாட்டு மக்களின் தவறான செயல்! பொலிஸார் வெளியிட்ட அவசர அறிவிப்பு

0

பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்தை வேறு தேவைகளுக்காக பயன்படுத்த வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸார், பொது மக்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

 

முறைப்பாடுகள்

பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்க பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய 071-8598888 எனும் வட்ஸ் அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட குறித்த வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 7000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி தீர்வு

குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும் குறித்த எண்ணிலிருந்து பெறப்பட்ட சில முறைப்பாடுகள் பொலிஸாருடன் தொடர்பானவை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை மட்டும் குறித்த வட்ஸ் அப் எண்ணில் பதிவிடுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version