Home உலகம் பங்களாதேஷில் வெடித்த வன்முறை: இடைக்கால அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பங்களாதேஷில் வெடித்த வன்முறை: இடைக்கால அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

பங்களாதேஷ் (Bangladesh) வன்முறையின்போது கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின் கீழ் (International Court of Justice) விசாரிக்கப்படுவார்கள் என அந் நாட்டின் இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

பங்களாதேஷில் இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், ஷேக் ஹசீனா (Sheikh Hasina) பதவி விலக வேண்டும் எனவும் மாணவர்கள் போராட்டம் நடத்தியதுடன் இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது.

இதனால் ஷேக் ஹசீனா கடந்த 05ஆம் திகதி பதவி விலகினார்

இடைக்கால அரசு

பங்களாதேஷில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததால் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முகமது யூனுஸ் (Muhammad Yunus) தலைமையில் இடைக்கால அரசு  தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வன்முறையின்போது கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சட்ட ஆலோசகர் கூறும்போது “போராட்ட வன்முறை தொடர்பாக ஐநா-வின் மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கான முயற்சியை இடைக்கால அரசு மேற்கொண்டுள்ளது.

ஜூலை 1 முதல் ஒகஸ்ட் 5ஆம் திகதி வரை நடைபெற்ற கொலைகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரணை நடத்த முயற்சி செய்யப்படும்” எனவும் சட்ட ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version