Home உலகம் இஸ்ரேல் தலையில் விழப்போகும் இடி: முரட்டு எச்சரிக்கை விடுத்த ஈரான்

இஸ்ரேல் தலையில் விழப்போகும் இடி: முரட்டு எச்சரிக்கை விடுத்த ஈரான்

0

ஈரான் (Iran) மீது நடாத்தப்பட்ட இஸ்ரேலின் (Israel) அத்துமீறி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி (Ali Khamenei) உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் இஸ்ரேல் ஈரான் மீது நடாத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட இராணுவ நிலைகள் அழிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலினால் ஈரானில் விமான போக்குவரத்து முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈரானின் உயர் தலைவர்

இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் தாக்குதலில் பலியான வீரர்களின் உறவினர்களை சந்தித்த அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேலுக்கு வலியை புரிய வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறியிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் ஈரான் தற்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்த அந்நாட்டு உயர் தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது நேரடியாக ஈரான் இராணுவம் ட்ரோன்கள், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

மேலும், ஹிஸ்புல்லா (Hezbollah), ஹமாஸ் (Hamas), ஈரான், ஏமானின் ஹைத்தி, உள்ளிட்ட போராளி குழுக்களும் இணைந்து இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தலாம் என தெரவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரான் எந்தவிதமான தாக்குதலை நடத்தினாலும் அதனை முறியடிக்கும் வல்லமை தங்களுக்கு இருக்கிறது என இஸ்ரேல் கூறியுள்ளது.  

அமெரிக்காவின் தடுப்பு

அமெரிக்காவின் (United States) ஏவுகணை தடுப்பு அமைப்பான தாட் இஸ்ரேலில் நிறுவப்பட்டு இருக்கும் நிலையில் ஈரான் விமானங்கள் நுழைந்தால் அவை தரையில் வீழ்த்தப்படும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளான மேத்யூ மில்லர், “எங்கள் எச்சரிக்கையை மீறி ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுப்போம்.

மத்திய கிழக்கில் பதட்டத்தை அதிகரிக்க வேண்டாம் என ஈரானுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version