Home உலகம் ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்: ட்ரம்ப் அறிவிப்புக்கு பின் பதற்றம்

ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்: ட்ரம்ப் அறிவிப்புக்கு பின் பதற்றம்

0

ஈரான் (Iran) மற்றும் இஸ்ரேலில் (Israel) தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) போர்நிறுத்தத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்த தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஏழாவது மாவட்டத்தை நோக்கி வெளியேற்ற உத்தரவை இஸ்ரேலிய பாதுகாப்பு படை பிறப்பித்த சிறிது நேரத்திலேயே, அங்கு தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளன.

பலத்த வெடிச்சத்தங்கள்

குறித்த விடத்தை ஈரானிய ஊடகம் உறுதிபடுத்தியுள்ளது.

அத்தோடு, தெஹ்ரானிலும் அதற்கு அருகிலுள்ள நகரமான கராஜ் மற்றும் வடக்கு நகரமான ராஷ்ட்டிலும் பலத்த வெடிச்சத்தங்களைக் கேட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதையடுத்து, வெடிப்புகளைத் தொடர்ந்து தெஹ்ரானில் வான் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version