Home உலகம் இப்ராஹிம் ரைசியின் மரணம்: வெளியாகியுள்ள விசாரணை முடிவுகள்

இப்ராஹிம் ரைசியின் மரணம்: வெளியாகியுள்ள விசாரணை முடிவுகள்

0

கடந்த மே மாதம் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) கொல்லப்பட்ட உலங்குவானூர்தி விபத்து என்று இறுதி விசாரணை முடிவுகள் வெளியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மோசமான வானிலை மற்றும் விமானியால் உலங்குவானூர்தியின் எடையைக் கையாள இயலாமையினால் ஏற்பட்டது என்று இறுதி விசாரணை முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

ஈரானிய செய்தி நிறுவனமான ஃபார்ஸ் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

உலங்குவானூர்தி விபத்து 

குறித்த உலங்குவானூர்தி நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிக எடையை சுமந்து சென்றதாக கண்டறிந்தது. இந்த முடிவுகள் கடந்த மே மாதம் ஈரானிய (iran) இராணுவத்தின் ஆரம்ப விசாரணையை உறுதிப்படுத்துகிறது.

இப்ராஹிம் ரைசியின் உலங்குவானூர்தி விபத்து தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ளது.

நடந்தது விபத்து தான் என்பதில் முழு உறுதி உள்ளது என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கொள்காட்டி ஃபார்ஸ் செய்தி கூறியது.

ஈரானிய இராணுவ விசாரணை

முன்னதாக கடந்த மே மாதம், ஈரானிய இராணுவம், அதன் ஆரம்ப விசாரணையில், ஹெலிகொப்டர் இடிபாடுகளில் “புல்லட் ஓட்டைகள்” இருந்தற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்று கண்டறிந்தது.

NO COMMENTS

Exit mobile version