இஸ்ரேல் (Israel) மீது ஈரான் (Iran) இரண்டாம் கட்ட தாக்குதலை நடத்த உள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்.ஈரானின் ரேடார் சிஸ்டங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஈரான் உள்ளே வரக்கூடிய போர் விமானங்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஈரான் பதிலடி
சமீபத்தில்தான் ஈரான் மீது மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.
மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
இத்தனை நாட்கள் ஈரான் அமைதியாக இருந்ததுடன் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை வைத்து proxy war அதாவது நேரடியாக போர் நடத்தாமல் மறைமுகமாக இஸ்ரேலை தாக்கி வந்தது.
ஹைப்பர்சோனிக்
இந்நிலையில்,இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் பல்வேறு ஏவுகணைகளை எல்லை நோக்கி கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
#OpTruePromise3 என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளதுடன் இதற்காக ஈரான் ராணுவம் பல்வேறு ஏவுகணைகளை சுரங்கங்கள் வழியாக கொண்டு செல்ல தொடங்கி உள்ளது.
இந்த தாக்குதலை மேற்கொள்வதற்காக ஈரான் ஃபத்தாஹ் 1 என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகனைகளை பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.