இஸ்ரேலிய குடிமக்களின் இறப்புக்கு ஈரான் “மிகப் பெரிய விலையை” கொடுக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(benjamin nethanyahu) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் பட் யாமில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட பின்னர் பேசிய நெதன்யாகு, இது “பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை திட்டமிட்டு படுகொலை செய்த சம்பவம்” என்றும், ஈரான் இஸ்ரேலுக்கு “பெரும் அச்சுறுத்தலை” ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
மக்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்
கொல்லப்பட்டவர்களுக்கு “துக்கத்தை வெளிப்படுத்துவதாகவும்”, “எங்கள் இதயங்கள் குடும்பங்களுடன் உள்ளன” என்றும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் அதிகாரிகளின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களை கேட்டுக் கொண்டார்.
