Home உலகம் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்: புறந்தள்ளும் ஈரான்

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்: புறந்தள்ளும் ஈரான்

0

அமெரிக்காவுடன் (America) பேச்சுவார்த்தை நடத்தலாமா வேண்டாமா என்பது தொடர்பில் தெஹ்ரான் (Tehran) இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான பேச்சுவார்த்தை குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதற்கு நேர்மாறாக, அதாவது ஈரானும் அமெரிக்காவும் அடுத்த வாரம் சந்தித்து அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இணங்குவார்கள் என நேற்று (25) குறிப்பிட்டிருந்தார்.

இராஜதந்திரம் 

இருப்பினும், தற்போது அமெரிக்காவுடனான இராஜதந்திரம் தமது நலனுக்கு உகந்ததா என்பதை தெஹ்ரான் மதிப்பிட்டு வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தற்போது வரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அரக்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version