Home உலகம் ஈரானில் பரபரப்பு: மாயமான உச்ச தலைவர் அலி கமேனி

ஈரானில் பரபரப்பு: மாயமான உச்ச தலைவர் அலி கமேனி

0

இஸ்ரேலுடனான நேரடி மோதல் நிறைவுற்றிருந்தாலும், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடந்த ஒரு வாரமாக பொதுவெளியில் தோன்றவில்லையெனும் தகவல் ஈரானியர்கள் இடத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 13ஆம் திகதி நடந்த தாக்குதல்களின் பின்னர், கமேனி பாதுகாப்புக்காக ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வெளியில் வராததற்கு காரணம்

தற்போது ஏற்பட்ட அமைதிப் புரிந்துணர்வின்போதும் அவர் வெளியில் வராதது, இஸ்ரேல் அவரை குறிவைக்கக் கூடும் எனும் அச்சத்தினாலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அத்துடன், அவரது நிலை குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை எனவும் போர்நிறுத்த முடிவுகளை மேற்பார்வையிடுகிறாரா என்பது கூட தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் ஆதிகாரப் போட்டி

இதன்படி, கமேனியின் நெருங்கிய உதவியாளர் மெஹ்தி ஃபசாயேலி, “நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும். உச்ச தலைவரை பாதுகாப்பதில் பொறுப்பானவர்கள் தங்கள் வேலையை நன்கு செய்து வருகின்றனர். இறைவனின் ஆசீர்வாதத்துடன் வெற்றியை மக்கள் தங்கள் தலைவருடன் சேர்ந்து கொண்டாட வேண்டும், ” என கூறியுள்ளார்.

இந்நிலையில், கமேனியின் மௌனமும் காணாமற்போன நிலையும் காரணமாக, ஈரானின் கடுமையான மதவாதிகள் மற்றும் மிதவாதிகளுக்கிடையில் ஆட்சிப் போக்குகள் குறித்து உள்நாட்டுப் போட்டிகள் தீவிரமடைந்து வருகின்றதாக தெரியவருகிறது.    

NO COMMENTS

Exit mobile version