ஹமாஸின் (Hamas) அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh), தெஹ்ரானில் வைத்துக் கொல்லப்பட்டமையினை இஸ்ரேல் (Israel) ஒப்புக்கொண்டுள்ளது.
இதன்படி, இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த கட்டிடத்தின் மீது பரவலாக நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
போர் நிறுத்தம்
இதனிடையே, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் நிறுத்தம் குறித்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இதன்படி, ஹமாஸுடனான போர்நிறுத்தத்தை ஒப்புக்கொள்வதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உடன்படிக்கை எட்டப்படும் காலத்தினை குறிப்பிட முடியாது எனவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பேச்சுவார்த்தை 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பலஸ்தீனிய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.